வயல்வெளி பார்த்துவறட்டி தட்டிஓணாண் பிடித்துஓடையில் குளித்துஎதிர்வீட்டில் விளையாடிஎப்படியோ படித்த நான்ஏறிவந்தேன் நகரத்துக்கு !
சிறு அறையில் குறுகிப் படுத்துசில மாதம் போர்தொடுத்துவாங்கிவிட்ட வேலையோடுவாழுகிறேன் கணிப்பொறியோடு !
சிறிதாய்த் தூங்கிகனவு தொலைத்துகாலை உணவு மறந்துநெரிசலில் சிக்கிகடமை அழைக்ககாற்றோடு செல்கிறேன்காசு பார்க்க !
மனசு தொட்டுவாழும் வாழ்க்கைமாறிப் போகுமோ ?
மௌசு தொட்டுவாழும் வாழ்க்கைபழகிப் போகுமோ ?
வால்பேப்பர் மாற்றியேவாழ்க்கைதொலைந்து போகுமோ ?
சொந்த பந்தஉறவுகளெல்லாம்ஷிப் பைலாய்சுருங்கிப் போகுமோ?
வாழ்க்கை
தொலைந்து போகுமோமொத்தமும்!புரியாதுபுலம்புகிறேன்
நித்தமும்!
தாய் மடியில் தலைவைத்துநிலவு முகம் நான் ரசித்துகதைகள் பேசிகவலைகள் மறந்த காலம்இனிதான் வருமா ?
இதயம் நனைத்தஇந்த வாழ்வுஇளைய தலைமுறைக்காவதுஇனி கிடைக்குமா ?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!
No comments:
Post a Comment